புதிய பதிவுகளை மெயிலில் பெற உங்கள் இமெயில் முகவாியை உள்ளிடவும்

05 January 2017

சே தமிழின் அடுத்த வெற்றிப்பயணமான "விண்வெளி பயணக் குறிப்புகள்"

தோழமைகளுக்கு வணக்கம்.

எனது கலைப்பயணத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் பாராட்டவும் பாராட்ட விறுப்பற்றும் நகரும் அனைத்து நட்புகளுக்கும் நன்றிகள் பல.  தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக திரைத்துறையில் 'சே  தமிழ்' எனும் புனை பெயரில் பாடல்கள் எழுதும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன் என்பதைத் தங்களுடன் பகிர்வதில் அளவிலா மகிழ்வுறுகிறேன்.  என்னைப்பற்றியான தங்களது ஏராளமான விமர்சனங்களே என்னை இயங்க வைத்துள்ளது என்பதை என்றும் நான் மறவேன்.  இப்படியான ஓர் மதிப்புமிகு வாய்ப்பை நல்கிய அன்புத் தோழர்கள் ........ !!  ஆகியோர்களுக்கு எப்பொழுதும்  நன்றியுடையவனாகிறேன்.  

அத்துடன் பாடலாசிரியராக அறிமுகமாகும் முதல் திரைப்படத்திலேயே இரண்டு பாடல்கள் எழுதும் வாய்ப்பையும்  நடிக்கவும் வாய்ப்பைத் தந்திட்ட 'விண்வெளி பயணக் குறிப்புகள் ' திரைப்பட இயக்குனர் ஜெ.பி. , தயாரிப்பாளர் யாழ் மொழி ரா. பாபு, நாயகன் அத்விக், உதவி இயக்குனர் சண்முகம் ஆகியோர்களுக்கும் மற்றும் படக் குழுவினர்கள் அனைவருக்கும் எண்ணிலடங்கா நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். 
நன்றியுடன்........

சே  தமிழ்.
puthumaigopi.blogspot.com

No comments:

தினமொரு வாி

உன் அயலானை நேசி,

ஆனால், வேலியை எடுத்து விடாதே...