புதிய பதிவுகளை மெயிலில் பெற உங்கள் இமெயில் முகவாியை உள்ளிடவும்

24 September 2016

சே தமிழின் மகனுக்கு பெயா் சுட்டும் விழா & நன்றிகள்


சே தமிழின் மகனுக்கு பெயா் சுட்டும் விழா   &  நன்றிகள் (24.09.2016)



அன்பு நிறைந்த இவ்வுலகில் என்னையும் நேசிக்கின்ற, நானும் தங்களை நேசிப்பதற்கென வாய்ப்பினை வழங்கிய உண்மையான தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் , இதுவரை வழிகாட்டி நல்வழிப்படுத்திய இனியும் எனது ஒவ்வொரு நகர்வையும் செழுமைப்படுத்தவிருக்கிற ஆசிரியப் பெருமகான்களுக்கும் மற்றும் அரசியல் சார்ந்த சாராத உறவுகளுக்கும் வணக்கம். நான் பதிவிடும் இச்செய்தி பலருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்புண்டு. தெரியாதே! என்றாலும் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. சாதி ஒழிப்பிற்கான பல கோட்பாடுகளில் சாதி மறுப்புத் திருமணம் புரிவதும் ஒன்றே. நான் களம் கண்ட அரசியல் தளத்தில் மாநில அமைப்பாளராய் இருந்தவர் அடிக்கடி கூறிய வார்த்தை அது. இன்று சமூகத்தில் நிகழ்கின்ற ஆணவப் படுகொலைகளுக்கு மத்தியில் ஒடுக்கப்பட்ட சமூகம் என்று சொல்லக்கூடிய பிரிவைச் சார்ந்த ஆணும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்ணும் திருமணம் முடிப்பதென்பதும் முடித்தாலும் பாதுகாப்பாக வாழ்வை நகர்த்துவதென்பதும் கடினம் தான்.
அவ்வகையில், கடந்த 04.03.2015 அன்று சே தமிழ் (செந்திலிங்கம் ) என்கிற எனக்கும் மு.ராதிகா அவர்களுக்கும் சாதி மறுப்புத் திருமணம் நிகழ்ந்திட்டது. வழக்கம் போல பெண் வீட்டில் எதிர்ப்பு தான். இருப்பினும் என் துணைவியாரின் தைரியத்தாலும் நம்பிக்கையாலும் ஆதிக்க சாதியவாதிகளின் ஒப்பனைகளுக்கு அன்றைய கூத்து நிகழ்விற்கு வாய்ப்பில்லாமல் போனது. சுமூகமாக எங்களது வாழ்க்கையும் நகரத் தொடங்கியது. நீண்ட நாட்களாகவே சிலருக்கு நான் நன்றிகள் சொல்லாமல் காலம் கடத்திவிட்டேன் என உள் மனம் அடிக்கடி புலம்பியது.
1.என் பெற்றோர் ,உடன் பிறந்தோருக்கு.
2.என் துணைவியாரின் தாய், தந்தையருக்கு.
3.மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு. சாதி மறுப்புத் திருமணம் செய்யவிருக்கிறேன் என்றதும் தங்களால் முடிந்த அளவிலான தொகையினை வசூல் செய்து பதிவுத் திருமணத்திற்கான அனைத்து செலவுகளையும் செய்திட்ட என் உயிரான நண்பர்கள் இவர்கள்.(2003 to 2005 batch)
4.சின்னா அண்ணா அவர்களுக்கு.வி.சி.க.
5.தோழர்கள் ஆர்.ஆர்.வென்னிலா .நாகராஜ். குருநாதன். விவேகானந்தன். வேலுச்சாமி. பிச்சையா. சிவகுரு. கோ.புரம் கோபி. முருகானந்தம் மற்றும் பலர்.
6.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்
7.இந்திய மாணவர் சங்க அமைப்பினர்
8.அகில இந்திய மாணவர் கழகத்தினர்
9.பகுஜன் சமாஜ் கட்சியினர்
10.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்
11.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்
12.அகில இந்திய பறையர் பேரவையினர் மற்றும் பிற அரசியல் சக்தியினர் அனைவருக்கும்.
13.மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்,ஆய்வாளர்கள். என சாதி மறுப்புத் திருமண களத்தில் துணிந்து நின்ற அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இந்நிலையில்
சாதி எதிர்ப்பு சிந்தனைகளோடு நகர்ந்து கொண்டிருக்கும் எங்களோடு (சே தமிழ்.ராதிகா) களப்பணியாற்றவும் கலைப்பணியாற்றவும் குடும்பத்தில் 24.08.2016 அன்று புதிதாய் ஒருவர் (ஆண் குழந்தை) இணைந்துள்ளார். அவருக்கு இன்று(24.09.2016) மாலை 4 மணியளவில் பெயர் சூட்டும் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. இப்பதிவை கண்டவர்கள் அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளுமாறு பணிவுடன் விரும்புகிறேன். ஒன்றை மட்டும் என் அனுபவத்திலிருந்து நன்கு உணர்ந்துள்ளேன். சாதி ஒழிப்பிற்காகவும் சாதி மறுப்புத் திருமணத்திற்காகவும் ஆதரவு குரல் தருவாம் என்கிற பெயரில் சிலர் பசு தோல் போர்த்திய புலிகளாக உலா வருகின்றனர் என்பது உண்மை.
நன்றி.
இடம்: மதுரை காமராசர் பல்கலைக்கழகம் , M.R.S. குடியிருப்பு மனை, மதுரை.
பேச: 9790203566











No comments:

தினமொரு வாி

உன் அயலானை நேசி,

ஆனால், வேலியை எடுத்து விடாதே...