புதிய பதிவுகளை மெயிலில் பெற உங்கள் இமெயில் முகவாியை உள்ளிடவும்

17 July 2016

ஒரு ஆராய்ச்சி கலைஞனின் ஆசை- தினமலா் (சே தமிழ்)



தினமலா்                               17-07-2016                           ஞாயிறு                         சண்டே ஸ்பெஷல்      



                          தினமலா் பேப்பா் இணைப்பு (இங்கே கிளிக் செய்யவும்)









இன்டர்நெட், பேஸ்புக், வாட்ஸ்ஆப், மெசஞ்சர் சாட்டிங்... என 'நவீனம்' என்ற ஒற்றை சொல்லின் உற்சாகத்தில் ஒட்டுமொத்த மனைதயும் அலைபாய விட்டு, நம் முன்னோர் விட்டு சென்ற கலாசாரம், பண்பாடு, மண் மனம் மற்றும் மக்கள் மனங்களை பேசும் பழைமயும், கருத்து செழுமையும் ஒருங்கே கொண்ட நாட்டுப்புற கலைகளில் இருந்து இன்றைய இளம் தலைமுறை தொலைதுாரத்தில் விலகி சென்று கொண்டிருக்கிறது.

அதை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது, 'செந்தணல் கலைக் குழு'. இதில், நாட்டுப்புற கலையில் ஆராய்ச்சி (பி.எச்டி.,) மற்றும் ஆய்வு (எம்.பில்.,) படிக்கும் மாணவர்கள் 12 பேர் உள்ளனர்.

மதுரை காமராஜ் பல்கலைகழகம் நாட்டுப் புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறை மாணவர் செந்திலிங்கம் இதன் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். 2006ம் ஆண்டு முதல் மதுரை உட் பட பல்வேறு மாவட்டங்களில் சர்வேதச, சி.பி. எஸ்.., மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் நடக்கும் ஆண்டு விழாக்களில் நாட்டுப்புற கலைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகைள நடத்தி வருகிறார்.


குறிப்பாக, பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மான் கொம்பாட்டம், கும்மியாட்டம், நாட்டுப்புற பாட்டுக்கள், இசை நிகழ்ச்சிகைள நடத்தி வருகிறார். இதுதவிர கிராமங்களில் நடக்கும் கோயில் திருவிழாக்களிலும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். புகைபிடித்தல், மதுவுக்கு எதிரான பிரசாரம் போன்ற சமூக பிரச்னைகளுக்கு எதிராகவும் விழிப்புணர்வு நாடகங்கள், பாடல்களையும் எழுதி வருகிறார்.

ஆராய்ச்சிக்கு நடுவே கலை பயணத்தில் இருந்த அவர் நம்மிடம்...

'உலகமயமான சூழலில் தமிழக நாட்டுப்புற கலைஞர்களின் சமூக பண்பாட்டு பின்புலம்' என்பது தான் என் பி.எச்டி., தலைப்பு. நாட்டுப் புற கலைகள் மீது கொண்ட ஆர்வத்தால் அவை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். காதல், விவசாயத்தின் முக்கியத்துவம், குழந்தை பாடங்கள் தொடர்பான முற்போக்கு பாடங்கள் அடங்கிய ஒன்பது பாடல்கள் அடங்கிய சி.டி., தொகுப்புகள், 'யாத்தி உன்ன போல....' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன்.

நடிகர் விமல் நடித்த 'அஞ்சல' திரைப்படத்தில் 'நக்கல் மாமா...' 'அய்யங்குழி கருப்பா...' ஆகிய இரண்டு நாட்டுப்புற பாடல்களை பாடினேன். தற்போது செந்தில்குமார் தயாரிக்கும் 'மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட்' என்ற திரைப்படத்தில் 'ஆசைக்காரி... பாசக்காரி...' என்ற காதலில் கசிந்து உருகும் நாட்டுப்புற பாடலை பாடியிருக்கிறேன்.

டைரக்டர் ஜெயபிரகாஷ், நாட்டுப்புற பாடல்களை  மையமாக வைத்து இயக்கும் பெயரிடப் படாத திரைப்படத்திற்கு, இசை அமைப்பதற்காக இதுவரை நான் இசைத்த, 'நாட்டுப்புற இசை ஆல்பத்தை' அவருக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

எந்த கலைகளும் தாழ்வானது அல்ல. தாழ்வாக கருதப்படும் நாட்டுப்புற இசைக் கருவிகளை பயன் படுத்தி கர்நாடக இசை, பாடங்களை பாட முடியும் என்பதில் வெற்றி பெறுவதே எங்கள் குழுவின் லட்சியம். நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்கும் பயணம் தொடரும் என்கிறார், இந்த 'ஆராய்ச்சி' கலைஞர் செந்திலிங்கம் (என்ற) சே தமிழ்.

இவரை வாழ்த்த  97902 03566


No comments:

தினமொரு வாி

உன் அயலானை நேசி,

ஆனால், வேலியை எடுத்து விடாதே...